இந்த நாட்டில் பாரம்பரிய அரசியலை தோற்கடிக்க அனைவரும் முன்வரவேண்டும் என மாற்றத்திற்கான தமிழ் மக்கள் அமைப்பின் சிவலிங்கம் கமலேஸ்வரன் தெரிவித்தார்.
அனுரகுமார திஸநாயக்கவினை ஜனாதிபதியாக்க முன்வரவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்டு.ஊடக அமையத்தில் இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
உள்ளூர் உற்பத்திகளை பெருக்காமல் இரண்டு வருடமாக கடன்கள் மூலமே நாட்டினை கொண்டுசெல்வதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.