2019 ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடும்போது தேர்தல் வன்முறைகள் 43வீதத்தினால் குறைவடைந்து காணப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜூலை 31ம் திகதி முதல் செப்டம்பர் ஐந்தாம் திகதி வரை 2460 தேர்தல்வன்முறைகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீரத்நாயக்க இவற்றில் பெரும்பாலான முறைப்பாடுகள் ( 2387) தேர்தல் சட்ட மீறல்கள் என்ற வகைக்குள் அடங்குகின்றன என தெரிவித்துள்ளார்.
11 முறைப்பாடுகளை மாத்திரம் வன்முறைகள் என குறிப்பிடலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது 2019ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது தேர்தல்வன்முறைகள் 43. 7 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதை வெளிப்படுத்துகின்றது,2019 இல் தேர்தல் சட்டமீறல்கள் 4234 ஆக காணப்பட்டன,இம்முறை இதுவரை 2387 ஆக பதிவாகியுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வன்முறைகள் குறிப்பிடத்தக்க அளவு குறைவடைந்துள்ளன 11 சம்பவங்கள் மாத்திரம் பதிவாகியுள்ளன,2019 இல் 34 சம்பவங்கள் காணப்பட்டன என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.