Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அக்கரப்பத்தனை பகுதியில் பொலித்தீன் பையினுள் இருந்து சிசுவின் சடலம் மீட்பு!

அக்கரப்பத்தனை பகுதியில் பொலித்தீன் பையினுள் இருந்து சிசுவின் சடலம் மீட்பு!

2 years ago
in செய்திகள்

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட என்போல்ட் தோட்டப்பிரிவில் முச்சக்கரவண்டி ஒன்றில் இருந்து சிசுவொன்றின் சடலமொன்று நேற்று திங்கட்கிழமை (09) இரவு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் துர்நாற்றம் வீசியதால் தோட்ட மக்கள் முச்சக்கரவண்டியினுள் சென்று பார்த்த போது கறுப்புநிற பொலித்தீன் உறையில் போடப்பட்டு சிவப்பு நிறத் துணியொன்றில் சுற்றி மறைக்கப்பட்ட நிலையில் இருந்த சிசுவின் சடலத்தை கண்டு அக்கரப்பத்தனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

எனினும் சிசுவின் தாய் தொடர்பிலும், மேற்படி சிசுவின் சடலத்தை அவ்விடத்திற்கு கொண்டு வந்து விட்டுச் சென்றவர் தொடர்பிலும் இதுவரை எவ்வித தகவல்களும் தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் 28 வயதுடைய முச்சக்கரவண்டியின் சாரதி சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதவான் பார்வையிட்டதன் பின்னர் விசாரணைகள் மேற்கொண்டு சிசுவின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (10) நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பில் அக்கரப்பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
சினிமா

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
செய்திகள்

யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு

September 7, 2026
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!
செய்திகள்

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!

September 7, 2026
கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்
செய்திகள்

கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்

September 7, 2026
குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை
செய்திகள்

குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை

September 7, 2026
Next Post
முன்னறிவித்தல் இன்றி விடுமுறை பெறும் அரச ஊழியர்களுக்கு எச்சரிக்கை!

முன்னறிவித்தல் இன்றி விடுமுறை பெறும் அரச ஊழியர்களுக்கு எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு