வட மேல் மாகாணஆளுநர் கௌரவ ஹாபிஸ் நசிரின் வழிகாட்டலில் சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து வெள்ளிக் கிழமையன்று (13) ஜும்ஆ தொழுகையின் பின்னர் மீராவோடை, ஓட்டமாவடி பிரதேசங்களில் ஆதரவாளர்களால் துண்டு பிரசுங்கள் வழங்கி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
மீராவோடை மேற்கு வட்டாரக் குழுத் தலைவர் எம்.எம்.அலி அன்சார் தலைமையில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. துண்டுப் பிரசுரங்களும் வழங்கி வைக்கப்பட்டது.