இந்த ஆண்டில் (2024) பூமிக்கு தற்காலிகமாக மற்றொரு நிலவு கிடைக்கப்போகிறது என்ற தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஓகஸ்ட் 7 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்ட 10 மீட்டர்கள் உள்ள சிறு கோள் கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு Asteroid 2024 PT5 என்று பெயரிடப்பட்டது.
இந்த சிறு கோள் ஆனது எதிர்வரும் செப்டம்பர் 29 முதல் 2024 நவம்பர் 25 வரை பூமிக்கு சிறு நிலவாக [mini- செயல்பட உள்ளது.
இந்த குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டும் பூமியின் புவியீர்ப்பு விசையினால் ஈர்க்கப்பட்டு இந்த சிறுகோள் பூமியை சுற்றவுள்ளது.
எனினும், ஒரு முறை முழு சுற்றை நிறைவு செய்யும் முன்னரே [அதாவது நவம்பர் 25க்கு பின்னர்] பூமியின் புவியீர்ப்பு விசையில் இருந்து விடுபட்டு சூரியனை சுற்றத் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் சிறிய அளவில் உள்ளதால் பூமியைச் சுற்றும் காலகட்டத்தில் இதை வெறும் கண்களால் பார்ப்பது சிரமம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.