செல்லுபடியற்ற சாரதி அனுமதிப்பத்திரத்துடன் காரை ஓட்டிச்சென்ற தேரர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக குருணாகல் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் மீரிகமவில் உள்ள விகாரை ஒன்றில் வசிக்கும் 46 வயதான தேரர் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தேரர் கண்டியில் இருந்து குளியாப்பிட்டிய கந்தானேகெதர பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றை நோக்கி காரில் பயணித்துக்கொண்டிருக்கும்போது குருணாகல் போக்குவரத்து பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது தேரர் காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்தை வைத்திருந்தமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து, தேரர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குருணாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.