சென்னை துரைப்பாக்கத்தில் இன்று (19)அதிகாலை பெண் ஒருவரை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து அடைக்கப்பட்ட சூட்கேஸ் கிடைத்துள்ளது.
சென்னை துரைப்பாக்கம் குமரன் குடில் குடியிருப்பு அருகேயே இந்த துர்நாற்றம் வீசிய நிலையில் சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. மேலும் அதில் இருந்து இரத்தம் வழிந்தோடியதால் அங்கிருந்த பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சூட்கேஸை திறந்து பார்த்த போது அதில் பெண் ஒருவரின் உடலை துண்டு துண்டாக வெட்டி அடைக்கப்பட்டிருந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொலிஸார் பெண்ணின் உடலைக் கைப்பற்றி சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் கொலை செய்யப்பட்ட பெண் யார் என்றும், கொலை செய்தது யார் என்றும் பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, சென்னை மாதவரத்தை சேர்ந்த 32 வயதான தீபா என்ற பெண்ணை கொலை செய்திருப்பது தெரியவந்தது. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக காணாமல் போனதாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது துரைப்பாக்கம் குமரன் குடில் பகுதியில் வசித்து வரும் மணி என்ற இளைஞர் சூட்கேஸை வீசி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, போலிசார் மணியின் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.