இலங்கையில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் தோல்விக்கும் அநுரகுமாரவின் வெற்றிக்கான காரணம் என்ன என்பதை இந்தியாவின் பத்திரிகையாளர் உமாபதி இலங்கை ஊடகம் ஒன்றிற்கு தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது,
இலங்கையில் மிகப்பெரிய ஜனநாயக புரட்சி ஒன்று நடைபெற்றுள்ளதுடன் இந்த நூற்றாண்டின் இலங்கையின் மிகப்பெரிய அரசியல்வாதி யார் என்றால் அது ரணில் விக்ரமசிங்கதான். நாடு இக்கட்டான நிலையில் இருந்தபோது நாட்டை ரணிலிடமே கையளித்தனர்.
அந்த நேரம் நாட்டை துணிவுடன் பொறுப்பேற்று, நாட்டை முன்னேற்றி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்தவர் ரணில்.
அதேசமயம் இலங்கையில் இடம்பெற்ற பெரும் மாற்றங்களுக்கு எல்லாம் வித்திட்டவர் ரணில் தான் ஆனால் அவருக்கு மக்கள் செல்வாக்கு என்பது தேர்தல் அரசியலில் கிடையாது.
அவர் தனிப்பட்ட ரீதியில் ஊழல்வாதி அல்ல ஆனால் ஊழல்வாதிகளுடன் மிகப்பெரிய கூட்டாளிகளாக இருந்துள்ளார். அதனுடைய விளைவே இன்று அநுர குமார திஸநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட காரணமாகும் என தெரிவித்துள்ளார்.