Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடர்பில் விஜய் தொலைக்காட்சியின் உத்தியோகபூர்வ அறிவிப்பு!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடர்பில் விஜய் தொலைக்காட்சியின் உத்தியோகபூர்வ அறிவிப்பு!

2 years ago
in சினிமா, செய்திகள்

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டு காலமாக பிரபலமான நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 8 ஒளிபரப்பு தொடங்கும் திகதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, அக்டோபர் முதல் வாரம் அதாவது 6ம் திகதி ஞாயிற்றுக் கிழமை பிக்பாஸ் தமிழ் சீசன் 8 தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் டிஸ்னி பிளாஸ் ஹாட் ஸ்டாரில் இந்த நிகழ்ச்சியை 24 மணி நேரமும் பார்த்து ரசிக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.தற்போது வெளியாகி இருக்கும் இந்த தகவலால் பிக் பாஸ் பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை 7 சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் 8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருப்பதால், ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் இந்த நிகழ்ச்சியை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டு காலமாக பிரபல நிகழ்ச்சி பிக் பாஸ். இது தமிழ் மொழியில் மட்டுமின்றி ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடைபெற்று வருகிறது.

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி ஏற்கனவே 7 சீசன் கடந்த நிலையில் தற்போது 8 வது சீசனில் ரசிகர்களுக்கு பல ட்விஸ்ட் காத்திருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 7 சீசன்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உலக நாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினார். சில கமிட்மெண்ட் காரணமாக இதில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார்.

கடந்த சீசனின் தீம் இரண்டு வீடு என ப்ரோமோ வெளியிடப்பட்டது. இம்முறை ஆட்டமும் புதுசு ஆளும் புதுசு என்ற தீம் வெளியாகியுள்ளது. இதற்காக சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் திரை அமைத்து பொதுமக்கள் மத்தியில் ப்ரோமோ வெளியிடப்பட்டது.

அனைத்து விஷயத்தையும் நிதானமாக, வேறு ஒரு கோணத்தில் பார்க்கும் விஜய்சேதுபதி, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சரியான தேர்வு என அவரது ரசிகர்கள் அவரை வெகுவாக புகழ்ந்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்த பிக் பாஸ் 8 சீசன் போட்டியாளர்கள் யார் என்ற தகவலும் பரவி வருகிறது.

ரோஷினி ஹரிப்ரியன், விஜே விஷால், அக்ஷிதா அசோக், திவ்யா துரைசாமி, ஷாலின் ஜோயா, சம்யுக்தா விஸ்வநாதன், அமலா ஷாஜி, ஜாக்லின், தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், நடிகர் செந்தில், வினோத் பாபு, பவித்ரா ஜனனி உள்ளிட்டோர்களின் பெயர்களும் இதில் அடிப்பட்டு வருகிறது. இதில் யார் பிக் பாஸ் வீட்டிற்கு செல்வார்கள் என்பது நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நாளில் தான் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது .

Tags: Battinaathamnews

தொடர்புடையசெய்திகள்

இலங்கையுடன் மூன்று பாதுகாப்பு ஒப்பந்தங்கள்; ராஜ்நாத் சிங் முன்னிலையில் கைச்சாத்து!
செய்திகள்

இலங்கையுடன் மூன்று பாதுகாப்பு ஒப்பந்தங்கள்; ராஜ்நாத் சிங் முன்னிலையில் கைச்சாத்து!

September 9, 2026
தலைக்கவசமின்றி அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் பலி!
செய்திகள்

தலைக்கவசமின்றி அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் பலி!

September 9, 2026
பொது சுகாதாரத்தில் இலங்கையின் வரலாற்றுச் சாதனைகளுக்கு WHO அங்கீகாரம்
செய்திகள்

பொது சுகாதாரத்தில் இலங்கையின் வரலாற்றுச் சாதனைகளுக்கு WHO அங்கீகாரம்

September 9, 2026
AI மூலம் உருவாக்கப்படும் போலி பொலிஸ் விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

AI மூலம் உருவாக்கப்படும் போலி பொலிஸ் விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை!

September 9, 2026
சந்திவெளி விபத்தில் கிரான்குளத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞன் பலி
செய்திகள்

சந்திவெளி விபத்தில் கிரான்குளத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞன் பலி

September 9, 2026
இலங்கையில் டிக்டொக் முற்றாக தடைசெய்யப்படவேண்டுமென அர்ச்சுனா வலியுறுத்து
காணொளிகள்

இலங்கையில் டிக்டொக் முற்றாக தடைசெய்யப்படவேண்டுமென அர்ச்சுனா வலியுறுத்து

September 9, 2026
Next Post
சாய்ந்தமருது மக்களை கொச்சைப்படுத்தி பேசும் ரவூப் ஹக்கீம்!

சாய்ந்தமருது மக்களை கொச்சைப்படுத்தி பேசும் ரவூப் ஹக்கீம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு