வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்களை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன் அடிப்படையில் வட மாகாண ஆளுநராக நாகலிங்கம் வேதநாயகன் நியமிக்கப்பட்டுள்ளதுடன், இவர் யாழ் அரசாங்க அதிபராகவும் பணியாற்றியுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநராக பேராசிரியர் ஜெயந்த லால் ரத்நாயக்க அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், இவர் உவா வெலஸ்ஸ பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் ஆவார்.
அதேசமயம் இது தொடர்பில் உத்தியோக பூர்வ அறிவிப்புக்களோ, வர்த்தமானி அறிவித்தல்களோ இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.