அமெரிக்காவின் பல மாநிலங்களுக்கு சூறாவளி அபாயம் காரணமாக அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, சூறாவளியினால் வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, புளோரிடா, ஜோர்ஜியா, மற்றும் விர்ஜினியா ஆகிய மாநிலங்கள் பாதிக்கப்படலாம் என அமெரிக்கத் தேசிய சூறாவளி மையம் தெரிவித்துள்ளது.
மேலும், ஹெலன் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளி மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் புளோரிடா மாகாணத்தை முதலில் தாக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இன்று (27-09-2024) மற்றும் நாளை (28-09-2024) அந்தந்த மாநிலங்களில் உள்ள சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.