Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு!

ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், விளையாட்டு

ஆசிய கிரிக்கெட் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 6வது தடவையாக நடைபெறவுள்ள வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆடவர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை ஓமானில் நடைபெறவுள்ளது.

குறித்த தொடரானது முதல் தடவையாக டி20 போட்டிகள் வடிவில் நடைபெறவுள்ளது. இத் தொடரில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய ஐந்து டெஸ்ட் விளையாடும் நாடுகளின் ஏ அணிகள் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம், ஓமான் மற்றும் ஹொங்கொங் ஆகிய நாடுகளின் சிரேஷ்ட அணிகள் பங்கேற்கவுள்ளன.

இத்தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்படுவதுடன், குழுநிலையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும். இதில் ஒக்டோபர் 25ஆம் திகதி அரையிறுதிப் போட்டியும், ஒக்டோபர் 27ஆம் திகதி இறுதிப்போட்டியும் நடைபெறும்.

இதன்படி, குழு ஏ இல் இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹொங்கொங் ஆகிய அணிகளும் குழு பி இல் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

இதனிடையே, இம்முறை வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் நாளான்று 2 போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், முதல் நாளின் 2ஆவது போட்டியில் இலங்கை தங்களது முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

இலங்கை அணியானது ஒக்டோபர் 20ஆம் திகதி நடைபெறவுள்ள 2ஆவது லீக் போட்டியில் ஹொங்கொங் அணியையும், ஒக்டோபர் 22ஆம் திகதி நடைபெறவுள்ள 3ஆவது லீக் போட்டியில் பங்களாதேஷ் அணியையும் சந்திக்கவுள்ளது.

2013ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற முதல் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சம்பியன் பட்டத்தை வென்றது. இறுதியாக கடந்த ஆண்டு இலங்கையில் நடைபெற்ற தொடரில் பாகிஸ்தான் இந்திய அணியைத் தோற்கடித்து இரண்டாவது முறையாக சம்பியன் பட்டத்தை வென்றது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மட்டுமே இரண்டு தடவைகள் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளன.

Tags: BattinaathamnewscriketSPORTSNEWSSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பால் உற்பத்தியை அதிகரிக்க ரூ.1000 மில்லியன் ஒதுக்கீடு
செய்திகள்

பால் உற்பத்தியை அதிகரிக்க ரூ.1000 மில்லியன் ஒதுக்கீடு

July 24, 2026
வவுணதீவில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு; பெருமளவு பொருட்கள் கைப்பற்றல்!
செய்திகள்

வவுணதீவில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு; பெருமளவு பொருட்கள் கைப்பற்றல்!

July 24, 2026
இந்த ஜெ ஆர் ஜெயவர்த்தன, பிரேமதாச, காமினி ஜய விக்ரம எல்லோரும்சேர்ந்து தமிழ் மக்களை அழித்தார்கள்-அமைச்சர் சந்திரசேகர்
காணொளிகள்

இந்த ஜெ ஆர் ஜெயவர்த்தன, பிரேமதாச, காமினி ஜய விக்ரம எல்லோரும்சேர்ந்து தமிழ் மக்களை அழித்தார்கள்-அமைச்சர் சந்திரசேகர்

July 24, 2026
EPF சேவைகள் இரு நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தம்; தொழில் திணைக்களம் அறிவிப்பு!
செய்திகள்

EPF சேவைகள் இரு நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தம்; தொழில் திணைக்களம் அறிவிப்பு!

July 24, 2026
திருகோணமலையில் ரூ.2.5 கோடி பெறுமதியான ‘ராவண கல்’ விற்பனை முயற்சி; இருவர் கைது
செய்திகள்

திருகோணமலையில் ரூ.2.5 கோடி பெறுமதியான ‘ராவண கல்’ விற்பனை முயற்சி; இருவர் கைது

July 24, 2026
ஜப்பான் நிதியுதவியில் 7 புதிய மெட்ரோ பஸ்கள் இலங்கைக்கு வருகை!
செய்திகள்

ஜப்பான் நிதியுதவியில் 7 புதிய மெட்ரோ பஸ்கள் இலங்கைக்கு வருகை!

July 24, 2026
Next Post
சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் நீடிப்பு!

சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் நீடிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு