Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு கல்லடி தூய அன்னை வேளாங்கண்ணி ஆலய வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு!

மட்டக்களப்பு கல்லடி தூய அன்னை வேளாங்கண்ணி ஆலய வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் கல்லடி தூய அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நேற்று (29) திகதி நிறைவுபெற்றது.

கடந்த 20 ஆம் திகதி ஆலய பங்குத்தந்தை அருட்பணி லோரன்ஸ் லோகநாதன் அடிகளார் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி திருவிழா நவ நாட்காலங்களில் தினமும் மாலை திருச்செபமாலையும் தொடர்ந்து திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டு, நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மாலை அன்னையின் திருச்சொரூப பவனி இடம்பெற்றதனைத் தொடர்ந்து நற்கருனை ஆராதனை நடைபெற்றது.

நேற்று காலை 7.00 மணிக்கு மன்னார் மறை மாவட்ட இயேசு சபை துறவி அருட்தந்தை அன்ரனி ரொபர்ட் அடிகளார் தலைமையில் திருவிழா கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, கொடியிறக்கத்துடன் இவ்வாண்டிற்கான ஆலய திருவிழா இனிதே நிறைவடைந்துள்ளது.

இத்திருவிழா கூட்டுத் திருப்பலியில் மட்டக்களப்பு மறை மாவட்ட இயேசு சபை துறவிகளான அருட்தந்தை ரொசான் அடிகளார், அருட்தந்தை ஜோசப் மேரி அடிகளார் உட்ளிட்ட அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அருட்பணியாளர்கள், துறவியர்கள், பங்குமக்கள் மற்றும் அயல்பங்கு மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

திருவிழா திருப்பலியை தொடர்ந்து ஆலய முன்றலில் இடம்பெற்ற அன்னையின் திருச் சொரூப ஆசிருடன் ஆலய வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கண்டி ஹந்தானை மலைத்தொடரில் சிக்கித் தவித்த இருவர் இராணுவத்தினரால் பத்திரமாக மீட்பு!
செய்திகள்

கண்டி ஹந்தானை மலைத்தொடரில் சிக்கித் தவித்த இருவர் இராணுவத்தினரால் பத்திரமாக மீட்பு!

October 23, 2026
பேஸ்புக் நிறுவனத்திற்கு 2.36 இலட்சம் கோடி ரூபாய் அபராதம்
உலக செய்திகள்

பேஸ்புக் நிறுவனத்திற்கு 2.36 இலட்சம் கோடி ரூபாய் அபராதம்

October 23, 2026
செம்மணிப் அறிக்கையில் ‘பெரும் புதைகுழி’ என்ற சொல் நீக்கம்; நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல்!
செய்திகள்

செம்மணிப் அறிக்கையில் ‘பெரும் புதைகுழி’ என்ற சொல் நீக்கம்; நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல்!

October 23, 2026
தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 3 இலங்கையர்கள் கைது; லண்டன் செல்லத் திட்டமிட்டிருந்ததாகத் தகவல்!
செய்திகள்

தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 3 இலங்கையர்கள் கைது; லண்டன் செல்லத் திட்டமிட்டிருந்ததாகத் தகவல்!

October 23, 2026
வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் தாழமுக்கம்; முரசு சூறாவளி குறித்த தகவல்
செய்திகள்

வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் தாழமுக்கம்; முரசு சூறாவளி குறித்த தகவல்

October 23, 2026
மலேசிய பாடசாலையில் 16 வயது மாணவன் தலையில் தொலைபேசியை பொருத்திக்கொண்டு செய்த கொடூரம்
உலக செய்திகள்

மலேசிய பாடசாலையில் 16 வயது மாணவன் தலையில் தொலைபேசியை பொருத்திக்கொண்டு செய்த கொடூரம்

October 23, 2026
Next Post
கொழும்பிலும் களமிறங்குகிறது ஈ.பி.டி.பி!

கொழும்பிலும் களமிறங்குகிறது ஈ.பி.டி.பி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு