காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட காத்தான்குடி – 05, அஹமட் பரீட் வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதன்போது 15 வயது சிறுவன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
தனது நண்பர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு காத்தான்குடி- 05, அஹமட் பரீட் மாவத்தை வீதி வழியாக பயணித்து வந்துகொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து குறித்த வீதியில் காணப்பட்ட மின்கம்பம் ஒன்றுடன் மோதியே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த இளைஞனின் சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன்
இது குறித்த மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.