இலங்கை தனது வரலாற்றில் மிகவும் கடினமான பொருளாதார சவாலை வெற்றி கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சர்வதேச ப்ளூம்பேர்க் இணையத்தளம் வெளியிட்ட அறிக்கைக்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.
ஸ்திரத்தன்மையை நோக்கிய பொருளாதார பயணத்தை இலங்கை ஆரம்பித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையினால் ஆரம்பிக்கப்பட்ட கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் வெற்றியடைந்தால் இலங்கை அதிக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து வெற்றிகரமான பயணத்தை மேற்கொள்ள முடியும் என்பதையும் இது காட்டுகிறது.
வெளிநாட்டு கையிருப்புகளை அதிகரிப்பதன் மூலமும் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலமும் கடன் நிலைத்தன்மையை அடைவதில் இலங்கை முன்னேற்றம் காட்டி வருவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.