காத்தான்குடி அரபிக்கலாசாலை வீதி, ஜாமியுழ்ழாபிரீன் ஜூம்ஆ பள்ளிவாயலுக்குச் சொந்தமான மையவாடிக் காணி அமைந்து காணப்படும் சந்தியில் இருந்து பிரதான வீதி வரையிலான பகுதியில் கனரக வாகனங்கள் சட்ட விரோதமாக நிறுத்தி விட்டு செல்லும் நிலை அண்மைக் காலத்தில் அதிகரித்து காணப்படுவதுடன், இதனால் குறித்த வீதியில் போக்குவரத்திற்கு பாரிய இடைஞ்சல் ஏற்படுவதுடன் வடிகான் மூடிகளும் சேதம் அடைந்தன.
அத்துடன் மையவாடிக்கு ஜனாஸாக்களை எடுத்துச் செல்லவதற்கும் இடையூறு ஏற்படுவதாக தொடர்ச்சியாக பொது மக்கள் காத்தான்குடி நகர சபைக்கு முன்வைத்து வந்த முறைப்பாடுகளை தொடர்ந்து இதற்கு தீர்வாக மேற்குறிப்பிட்ட பகுதியை வாகனங்களை நிறுத்துவதற்கு தடை செய்யப்பட்ட இடமாக தற்போது காத்தான்குடி நகர சபையால் பிரகடனப்படுத்தப்பட்டு அறிவித்தல் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
இதற்கு காத்தான்குடி பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.