மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களுடனான கலந்துரையாடல் மாவட்ட செயலகம் மற்றும் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன் அவர்களின் நெறிப்படுத்தலில் மாவட்ட உற்பத்தித்திறன் இணைப்பாளர் இ.புவனேந்திரன் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.