மட்டக்களப்பில் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக முதன் முதலில் இன்று திங்கட்கிழமை (07) கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் 8 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாள் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு கச்சேரியிலுள்ள தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்யும் காரியாலயத்துக்கு தேர்தலில் போட்டியிடும் 8 வேட்பாளர்கள் சகிதம் சென்று வேட்பு மனுதாக்கல் செய்தனர்.
இந்த தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் உறுப்பினர்களான தர்மலிங்கம் சுரேஸ், சுப்பிரமணியம் சத்தியநாதன், கணவதிப்பிள்ளை குககுமாரராசா, அழகையா தேவகுமார், விஸ்னுகாந்தன் சௌமியா, குமாரசிங்கம் லிவாஸ்கர், முத்துக்குட்டி சத்தியகுமார், விநாயகம் தரணிகரன் ஆகிய 8 பேர் களமிறக்கப்பட்டு போட்டியிடுகின்றனர்
இதில் இருவரை தவிர ஏனைய அனைவரும் புதுமுகங்கள் என்பதுடன் கல்குடா, மட்டக்களப்பு, பட்டிருப்பு ஆகிய 3 தேர்தல் தொகுதியை சேர்ந்தவர்களை முன்னிறுத்தியுள்ளனர்.