பிரபல ஸ்பெயின் டென்னிஸ் வீரரான ரஃபேல் நடால் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
38 வயதான ரஃபேல் நடால் இதுவரை 22 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார்.
இவர் தற்பொழுது அவரது சமூக வலைத்தளத்தில் காணொளி ஒன்றில் தனது ஓய்வை அறிவித்து இரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளார்.
குறித்த காணொளியில் அவர் தெரிவித்துள்ளதாவது,
“நான் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றுக்கொள்கிறேன். கடைசி இரண்டு வருடம் மிகவும் கடினமாகவே இருந்தது. என்னால் இதற்கு மேல் விளையாட முடியாது என தோன்றியது. இந்த முடிவு அனைவரும் ஒரு நாள் எடுக்கதான் செய்ய வேண்டும், இந்த முடிவை எடுப்பதற்கு மிகவும் கடினமாகதான் இருந்தது.
இந்த வாழ்க்கையில் அனைத்திற்கும் தொடக்கமும் முடிவும் உள்ளது. என்னுடைய இறுதி போட்டியை நான் என்னுடைய நாட்டிற்காக டேவிஸ் கிண்ணத்திற்காக விளையாடவுள்ளேன்.
அனைவருக்கும் நன்றி. என்னுடைய சக வீரர்கள், என்னுடைய அணி, அம்மா, அப்பா, மாமா, என்னுடைய மனைவி கடைசியாக என்னுடைய இரசிகர்களாகிய உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.