Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வியாழேந்திரன் உட்பட மேலும் சில கட்சிகள் வேட்புமனுவை தாக்கல் செய்தன!

வியாழேந்திரன் உட்பட மேலும் சில கட்சிகள் வேட்புமனுவை தாக்கல் செய்தன!

8 months ago
in அரசியல், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கா வேட்புமனுத் தாக்கல் செய்யும் இறுதி பணிகள் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட ஐக்கிய சமாதான கூட்டமைப்பு வண்ணாத்திபூச்சி சின்னத்தில் பசீர் சேகுதாவூத் தலைமையில் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ,டெலிபோன் சின்னத்தில் போட்டியிட முன்னாள் பிரதி அமைச்சர் கணேசமூர்த்தி மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் அமீர் அலி தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

ஜனநாயக தேசிய கூட்டணி கட்சியில், தபால்பெட்டி சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியில் சூரியன் சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட எஸ்.அருண்தம்பிமுத்து தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

பொதுஜன பெரமுன சார்பில், மொட்டு சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் குதிக்க ரொசான் அமிந்த ஜயசிங்க தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

இதேபோன்று ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி சார்பில், கழுகு சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட நா.விஸ்னுகாந்தன் தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் , மரம் சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட எம்.எல்.ஏம்.எம். ஹிஸ்புல்லா தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

புதிய ஜனநாயக முன்னணி சார்பில், சிலிண்டர் சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற போட்டியிட சி.சுதர்சன் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.இதேபோன்று சர்வஜன பலயே கட்சி சார்பில், பதக்கம் சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மொகமட் சாபில் வேட்புமனு தாக்கல்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சில குறிப்பிட்ட ஐபோன்களில் YouTube செயலி இயங்காது
செய்திகள்

சில குறிப்பிட்ட ஐபோன்களில் YouTube செயலி இயங்காது

June 6, 2025
விடுதலைப் புலிகள் தொடர்பில் அர்ச்சுனாவின் கருத்திற்கு பாதுகாப்பு அமைச்சு பதில்
செய்திகள்

விடுதலைப் புலிகள் தொடர்பில் அர்ச்சுனாவின் கருத்திற்கு பாதுகாப்பு அமைச்சு பதில்

June 6, 2025
மஹியங்கனை உதவி பொலிஸ் அத்தியச்சகர் தன்னை தானே சுட்டு தற்கொலை
செய்திகள்

மஹியங்கனை உதவி பொலிஸ் அத்தியச்சகர் தன்னை தானே சுட்டு தற்கொலை

June 6, 2025
அஸாத் மௌலானா தொடர்பான விடயங்களை வெளிப்படுத்த முடியாது; பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு
செய்திகள்

அஸாத் மௌலானா தொடர்பான விடயங்களை வெளிப்படுத்த முடியாது; பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு

June 6, 2025
தெமட்டகொடையில் நான்கு முச்சக்கர வண்டிகள் முற்றிலுமாக எரிந்து தீக்கிரை
செய்திகள்

தெமட்டகொடையில் நான்கு முச்சக்கர வண்டிகள் முற்றிலுமாக எரிந்து தீக்கிரை

June 6, 2025
11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆர்.சி.பி அணி மீது வழக்குப்பதிவு
உலக செய்திகள்

11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆர்.சி.பி அணி மீது வழக்குப்பதிவு

June 6, 2025
Next Post
பொது தேர்தலை புறக்கணித்துள்ள நாமல்!

பொது தேர்தலை புறக்கணித்துள்ள நாமல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.