கோட்டாபய ராஜபக்சவினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.எஸ்.பி அபேசேகர இலங்கை காவல்துறையின் குற்றப்பிரிவு பணிப்பாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த அரசாங்கங்களினால் இடைநிறுத்தப்பட்ட பல குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எஸ்.எஸ்.பி அபேசேகரவின் நியமனத்திற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அபேசேகர அவர்கள் கோட்டாபய ராஜபக்ச நிர்வாகத்தால் நீக்கப்படுவதற்கு முன்னர் சில உயர்மட்ட கொலைகளை விசாரணை செய்வதில் ஈடுபட்டிருந்தார்.
அவரிடம் மூடப்படாத பல விசாரணை கோப்புகள் இருப்பதாக நம்பப்படுகிறது, அவ்வாறான விசாரணைகளை தொடரும் நோக்கத்தில் இந்த புதிய நியமனம் இருக்குமாக இருந்தால் பலர் இதன் மூலம் கைது செய்யப்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது “ஈஸ்டர்” தாக்குதல் உட்பட.