Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மடுல்சீமையில் வீசப்பட்டதாக கூறப்படும் இளைஞனின் சடலம் மீட்பு!

மடுல்சீமையில் வீசப்பட்டதாக கூறப்படும் இளைஞனின் சடலம் மீட்பு!

2 years ago
in செய்திகள்

மடுல்சீமை சிறிய உலக முடிவு பகுதியில் 500 அடி பள்ளத்தில் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டதாக கூறப்படும் இளைஞனின் சடலம் குடோ ஓயா இராணுவ கமாண்டோ உறுப்பினர்களால் நேற்று (16-10-2024) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் ஹாலிஎல ரொசவத்தை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய விவேகானந்தன் சூரியன் என்பவரே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

3 கமாண்டோக்கள் கயிறுகளின் உதவியுடன் பள்ளத்தில் இறங்கி மோசமாக சிதைவடைந்திருந்த உடலை மேலே கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேடுதல் நடவடிக்கையில் 10 கமாண்டோக்கள், இராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றுமுன்தினம் (15-10-2024) பதுளை எலதலுவ இராணுவ முகாமைச் சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்ததுடன், உயிரிழந்தவரின் 2 காலணிகளும், முக்காடும் காணப்பட்டன.

பள்ளத்தில் இறங்குவது கடினமாக இருந்ததால், ராணுவப்படை வரவழைக்கப்பட்டதாக பதுளை மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் சுஜித் வேதமுல்ல தெரிவித்தார்.

கொலை செய்யப்பட்ட இளைஞர் ஹாலிஎல பிரதேசத்தில் வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் பணிபுரியும் திருமணமாகாதவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சடலத்தை தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

சந்தேகநபர்கள் பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 30ஆம் திகதி திருமண நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக வீட்டில் இருந்து சென்ற மகன் பல நாட்களாகியும் வீடு திரும்பவில்லை என உயிரிழந்த இளைஞனின் தந்தை கடந்த 6ஆம் திகதி ஹாலிஎல பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!
செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

September 16, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!

September 16, 2026
போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
செய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

September 16, 2026
Next Post
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு என்னுடன் இணைந்து செயற்பட்ட அனுபவசாலிகள் நாடாளுமன்றத்திற்கு அவசியம்; முன்னாள் ஜனாதிபதி தெரிவிப்பு

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு என்னுடன் இணைந்து செயற்பட்ட அனுபவசாலிகள் நாடாளுமன்றத்திற்கு அவசியம்; முன்னாள் ஜனாதிபதி தெரிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு