Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மகனின் உயிரை காப்பாற்ற ஜீப் வண்டியின் சில்லில் சிக்கி உயிரிழந்த தந்தை; இறுதி மரியாதை செலுத்த வந்த மகன்!

மகனின் உயிரை காப்பாற்ற ஜீப் வண்டியின் சில்லில் சிக்கி உயிரிழந்த தந்தை; இறுதி மரியாதை செலுத்த வந்த மகன்!

2 years ago
in செய்திகள்

ஜீப் வண்டியொன்றில் கடத்திச் செல்லப்பட்ட தனது மகனைக் காப்பாற்ற முற்பட்ட தந்தையொருவர் ஜீப் வண்டியின் சில்லில் சிக்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று எஹலியகொட, பரகடுவ பிரதேசத்தில் இருந்து பதிவாகியிருந்தது.

குறித்த குழுவினரால் மகனும் அமில வீச்சுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தந்தையின் சடலத்தை பார்ப்பதற்காக மகன் இன்று (22) வீட்டிற்கு வந்துள்ளார்.

கடந்த 19ஆம் திகதி மாலை ஜீப் வண்டியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என தெரிவித்துக் கொண்டு குழுவொன்று பரகடுவ எஹெலியகொடவில் அமைந்துள்ள வீடொன்றுக்கு வந்துள்ளனர்.

வீட்டில் இருந்த இளைஞன் ஒருவர் மீது அமில வீச்சு தாக்குதலை மேற்கொண்டு, கைவிலங்கிட்டு பலவந்தமாக அழைத்துச் செல்ல அந்த கும்பல் முற்பட்ட போது, ​​அவரது தந்தை அதனை தடுக்க முயன்றுள்ளார்.

இதன்போது, தந்தை ஜீப்பில் தொங்க முற்பட்ட நிலையில், ஜீப்பினை நிறுத்தாமல் செலுத்தியதால் அவர் அதிலிருந்து கீழே விழுந்துள்ளார்.

கீழே விழுந்த தந்தை மீது ஜீப் வண்டியின் சில்லுகள் ஏறியதில் அவர் படுகாயமடைந்திருந்தார்.

விபத்தில் படுகாயமடைந்த 65 வயதுடைய தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

கடத்தப்பட்ட மகன் காயங்களுடன் வீதியில் விட்டுக் செல்லப்பட்டுள்ளதோடு, உறவினர்கள் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.

தனிப்பட்ட தகராறே இந்த தாக்குதலுக்கு காரணம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

செம்மணி புதைகுழியில் மேலும் 14 என்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!
செய்திகள்

செம்மணி புதைகுழியில் மேலும் 14 என்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

June 17, 2026
எரிபொருள் விலை எப்போது குறையும்? பதிலளித்தார் அனில் ஜயந்த!
செய்திகள்

எரிபொருள் விலை எப்போது குறையும்? பதிலளித்தார் அனில் ஜயந்த!

June 17, 2026
திருமண மண்டபத்தில் மோதல்; பொலிஸாரை தாக்கிய 7 பேர் கைது!
செய்திகள்

திருமண மண்டபத்தில் மோதல்; பொலிஸாரை தாக்கிய 7 பேர் கைது!

June 17, 2026
ஈரான் மீள்கட்டமைப்புக்கு 300 பில்லியன் டொலர் முதலீட்டு நிதி!
உலக செய்திகள்

ஈரான் மீள்கட்டமைப்புக்கு 300 பில்லியன் டொலர் முதலீட்டு நிதி!

June 17, 2026
அஸ்வெசும் பயனாளிகளுக்கு ஜூன் மாத கொடுப்பனவு நாளை வங்கி கணக்குகளில்!
செய்திகள்

அஸ்வெசும் பயனாளிகளுக்கு ஜூன் மாத கொடுப்பனவு நாளை வங்கி கணக்குகளில்!

June 17, 2026
கண்டி – தெல்தெனியாவில் காரிலிருந்து பெண் சடலம் மீட்பு; விசாரணை ஆரம்பம்!
செய்திகள்

கண்டி – தெல்தெனியாவில் காரிலிருந்து பெண் சடலம் மீட்பு; விசாரணை ஆரம்பம்!

June 17, 2026
Next Post
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க இலங்கைக்கு 30 மில்லியன் ரூபாவை அன்பளிப்பாக வழங்கிய சீனா

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க இலங்கைக்கு 30 மில்லியன் ரூபாவை அன்பளிப்பாக வழங்கிய சீனா

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு