பொலனறுவையில் பிரபல வர்த்தகர் டட்லி சிறிசேனவின் சுதுஅரலிய அரிசி ஆலையை அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.
மாவட்டத்தின் நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளே இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
நுகர்வோர் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காகவே இந்த சோதனையை மேற்கொண்டதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் மேலதிக தகவல்களை தெரிவிக்க மறுத்துள்ளனர்.