Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காவு வாங்குகிறதா கங்குவா திரைப்படம்?; படத்தொகுப்பாளரும் மரணம்!

காவு வாங்குகிறதா கங்குவா திரைப்படம்?; படத்தொகுப்பாளரும் மரணம்!

2 years ago
in உலக செய்திகள், சினிமா, செய்திகள்

கங்குவா திரைப்படத்தின் படத்தொகுப்பாளர் நிஷாத் யூசூப், அவரது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இயக்குநர் சிறுத்தை சிவா நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், நவ. 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கடந்த வாரம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இப்படத்துக்கான புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் படத்தொகுப்பாளர் நிஷாத் யூசூப், கொச்சியில் உள்ள அவரது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். 43 வயதாகும் நிஷாத், மலையாளம் மற்றும் தமிழ் மொழித் திரைப்படங்களுக்கு படத் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.

கடந்த 2022ஆம் ஆண்டு தல்லுமாலா படத்துக்காக சிறந்த படத்தொகுப்பாளருக்கான மாநில விருது நிஷாத்துக்கு வழங்கப்பட்டது. மேலும், உண்டா, ஒன், சௌதி வெள்ளக்கா மற்றும் அடியோஸ் அமிகோஸ் உள்ளிட்ட பிரபல திரைப்படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

சூர்யாவின் கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து, சூர்யா 45, மம்முட்டி மற்றும் மோகன்லால் நடிக்கும் திரைப்படங்களில் பணியாற்ற நிஷாத் ஒப்பந்தம் ஆகியிருந்தார். இந்நிலையில் கொச்சியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் நிஷாத் யூசுப் இன்று (30) அதிகாலை உயிரிழந்து கிடந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தற்கொலையா அல்லது கொலையா என்னும் கோணத்தில் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கெனவே கங்குவா திரைப்படத்தின் கலை இயக்குநர் மிலன் உயிரிழந்த நிலையில், படத் தொகுப்பாளரும் தற்போது மரணமடைந்துள்ளார். விடாமுயற்சி திரைப்படத்தின் பணிகளுக்காக அபர்பைஜான் சென்றிருந்த மிலன், அங்கு மாரடைப்பால் உயிரிழந்தார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பத் தகவல் திருத்தம்; ஓகஸ்ட் 3 வரை அவகாசம்
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பத் தகவல் திருத்தம்; ஓகஸ்ட் 3 வரை அவகாசம்

July 23, 2026
மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 100 டொலரைக் கடந்தது!
செய்திகள்

மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 100 டொலரைக் கடந்தது!

July 23, 2026
உயிர்த்த ஞாயிறு வழக்கு; கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு ஓகஸ்ட் 3 வரை ஒத்திவைப்பு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு வழக்கு; கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு ஓகஸ்ட் 3 வரை ஒத்திவைப்பு!

July 23, 2026
வானில் பறக்கும் அதானியின் கனவு; புதிய விமான நிறுவனம் குறித்து ஆலோசனை!
செய்திகள்

வானில் பறக்கும் அதானியின் கனவு; புதிய விமான நிறுவனம் குறித்து ஆலோசனை!

July 23, 2026
சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்
செய்திகள்

சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்

July 23, 2026
அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்
உலக செய்திகள்

அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்

July 23, 2026
Next Post
தீபாவளியை முன்னிட்டு பொலிஸாரின் அறிவுறுத்தல்

தீபாவளியை முன்னிட்டு பொலிஸாரின் அறிவுறுத்தல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு