அரசியல் சாசனம் பற்றி கூட அறியாத ‘குழந்தைகளால்’ மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பன்னல பிரதேசத்தில் நேற்று (29) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தற்போதைய அரசாங்கம் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என அவர் தெரிவித்துள்ளார்.
அங்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு நாட்டை நடத்துவதற்கு தேவையான பண ஏற்பாடுகள் செய்து தான் நாம் வெளியேறினோம்.
தனது நிர்வாகத்தின் போது செய்த பணிகளால் வெளிநாட்டு கையிருப்பு மற்றும் வருமானம் கிடைத்துள்ளது என்றார்.
தற்போதைய அரசாங்கத்தில் உள்ளவர்கள் அரசாங்கத்தை நடத்த வேண்டும்.
அவர்களால் அதனை முன்னெடுக்க முடியுமா எனத் தெரியவில்லை எனவும் அனுபவமிக்க குழு இருந்தால் அரசாங்கத்தை சரியான பாதையில் அனுப்ப முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரசாங்க ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் தேர்தல் காலத்தில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கியதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய கருத்து வெளியிட்டுள்ளார்.
அமைச்சரவை செயற்படுவதற்கு அதிகாரிகளின் அங்கீகாரம் தேவை என பிரதமர் கூறியுள்ள நிலையில், அரசியலமைப்புச் சட்டத்தை பிரதமர் எங்கிருந்து கற்றுக்கொண்டார் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசியலமைப்பின் 43 ஆவது சரத்தை பொருட்படுத்தாமல் அரசமைப்பைப் பற்றி அறிந்துகொண்டு நாட்டை ஆள அமைச்சர்கள் மற்றும் பிரதமருக்கு விருப்பமானால், அரசியலமைப்பு பற்றி கற்றுத்தர தான் தயார் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இங்கு தெரிவித்துள்ளார்.
மேலும், அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்காக நியமிக்கப்பட்ட உதய ஆர்.செனவிரத்ன நிபுணர் குழுவில் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவவும் அங்கம் வகித்ததை ரணில் விக்கிரமசிங்க நினைவு கூர்ந்தார்.