இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றலா விசாவில் வந்து சட்டவிரோதமாக தங்கியிருந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ்நாடு மதுரையைச் சேர்ந்த அக்கா தம்பி ஆகிய சகோதர்கள் இருவரை நேற்றுமுன்தினம் புதன்கிழமை (30) கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்
பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினடமான புதன்கிழமை மாலை ஏறாவூர் தளவாய் பகுதில் உள்ள வீடு ஒன்றை பொலிசார் சுற்றிவளைத்து முற்றுகையிட்டபோது அங்கு எந்தவிதமான ஆள் அடையாள ஆவணங்களும் இல்லாமல் இந்தியா தமிழ்நாடு மதுரையைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக தங்கியிருந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த இருவரையும் கைது செய்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் தமிழ்நாடு மரையைச் சோந்த 38 வயதுடைய பாலகிருஸ்ணன் ராயேஸ்வரி மற்றும் அவரின் சகோதரரான 51 வயதுடைய ஜெயசுந்தரம் தர்மர் இருவரும் சகோதர்கள் எனவும் கடந்த யூன் மாதம் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து இந்த பகுதில் தங்கியிருந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளனர் எனவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.