கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் மிகவும் பின்தங்கிய எல்லைக் கிராமத்தில் உள்ள குடும்பிமலை குமரன் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் நன்மை கருதி சுத்தமான குடிநீர் வழங்கும் நிகழ்வு நேற்று (03) குடும்பிமலையில் இடம்பெற்றது.
இவ் நிகழ்வினை இலங்கை இராணுவத்தின் 232 படைப்பிரிவின் தொப்பிகல இராணுவத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.10 வருடங்களுக்கு முன்னர் மரணமடைந்த தந்தையின் ஞாபகார்த்தமாக அவரது மகளான திருமதி திலினி ராமநாயக்கா குடும்பத்தினரால் ஒரு மில்லியன் ரூபா செலவில் இவ் மனித நேய உதவி வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் 23 ஆவது காலாட்படை பிரிவின் சிரேஷ்ட அதிகாரி மேஜர் ஜெனரல் பிரியந்த காரியவசம்,12 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையின் தளபதி சிரேஷ்ட அதிகாரி மேஜர் விஜித ஹேரத், 232 காலாட்படை தளபதி பிரிகேடியர் பிரசாத் ரண்டுனு, கிரான் பிரதேச செயலாளர் கே.சித்திரவேல் மற்றும் ஆசிரிய ஆலோசகர் எஸ்.விசிலியாஸ் ஆகியோர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் கல்வி கற்கும் போது குடிப்பதற்கும் மற்றும் கழிவறைக்கும் சுத்தமான தண்ணீர் இல்லாததால் மாணவர்கள் உடல் நலத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் அதனை கண்ணுற்ற 232 அவது படைப்பிரிவின் இராணுவ அதிகாரி இதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தார்.
அத்துடன் பாடசாலையை சுற்றி மூன்று சிறிய கிராமங்கள் உள்ளன.அந்த கிராம மக்களும் குடி நிர் வசதியின்றி மிகவும் சிரமப்பட்டனர்.அதனையும் நிவர்த்தி செய்யும் முகமாக இவ் குடி நீர் திட்டம் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டது.