கடவுச்சீட்டு பெறுவதற்காக கால ஒதுக்கத்தை புதிய இணையவழி முறைமை ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் புதிய இணையவழி முறைமை அமுல்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பதில் கட்டுப்பாட்டாளர் நிலுசா பாலசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய நடைமுறை மூலம் கடவுச்சீட்டு பெறுகைக்கான நீண்ட வரிசையை குறைத்துக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நவம்பர் இறுதி வரை திகதிகளை கொடுத்துள்ளோம். எனவே, டிசம்பர் முதலாம் திகதி முதல் திகதி ஒன்றை முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.