Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இன்று இரவு வியட்நாம் அரச விஜயம் மேற்கொள்ள ஜனாதிபதி

இன்று இரவு வியட்நாம் அரச விஜயம் மேற்கொள்ள ஜனாதிபதி

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மே 04 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொள்ள உள்ளார். அதற்காக, ஜனாதிபதி இன்றிரவு (03) நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளின் 55 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இடம்பெறும் ஜனாதிபதியின் இந்த வியட்நாம் அரச விஜயம், இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகளை மேலும் உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அரச விஜயத்தின் போது ஜனாதிபதி, வியட்நாம் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதுடன், கம்யூனிஸ கட்சியின் பொதுச் செயலாளர் உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் பலரையும் சந்திக்கவுள்ளார்.

மேலும், ஹோ சி மிங் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் வெசாக் தின கொண்டாட்டங்களில் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அதன்போது சிறப்புரை ஒன்றையும் நிகழ்த்தவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது இரு தரப்பினருக்கும் இடையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடவும், வர்த்தக சமூகத்தினரைச் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் குழு ஒன்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் இந்த அரச விஜயத்தில் பங்கேற்க உள்ளனர்.

Tags: BattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilanka

தொடர்புடையசெய்திகள்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் புதிய தலைவராக சந்திக எப்பிட்டகடுவ தெரிவு
செய்திகள்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் புதிய தலைவராக சந்திக எப்பிட்டகடுவ தெரிவு

June 28, 2026
மட்டக்களப்பில் மெதடிஸ்த திருச்சபையின் 212வது ஆண்டு நிறைவு விழா; நாளை காந்தி பூங்காவில் விசேட நிகழ்வுகளும் பேரணியும்
செய்திகள்

மட்டக்களப்பில் மெதடிஸ்த திருச்சபையின் 212வது ஆண்டு நிறைவு விழா; நாளை காந்தி பூங்காவில் விசேட நிகழ்வுகளும் பேரணியும்

June 28, 2026
அரச ஊழியர்களுக்கு தவணை முறையில் 20 கிலோ அரிசி வழங்க அரசு திட்டம்
செய்திகள்

அரச ஊழியர்களுக்கு தவணை முறையில் 20 கிலோ அரிசி வழங்க அரசு திட்டம்

June 28, 2026
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கலாரஞ்சினி கணேசலிங்கம் அவர்களுக்கு பிரியாவிடை நிகழ்வு
செய்திகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கலாரஞ்சினி கணேசலிங்கம் அவர்களுக்கு பிரியாவிடை நிகழ்வு

June 28, 2026
திருகோணமலையில் வேன் விபத்து; இருவர் படுகாயம்
செய்திகள்

திருகோணமலையில் வேன் விபத்து; இருவர் படுகாயம்

June 27, 2026
அதிக விலைக்கு கீரி சம்பா அரிசி விற்பனை; தம்புள்ளையில் இரு கடைகளுக்கு ரூ. 2 இலட்சம் அபராதம்!
செய்திகள்

அதிக விலைக்கு கீரி சம்பா அரிசி விற்பனை; தம்புள்ளையில் இரு கடைகளுக்கு ரூ. 2 இலட்சம் அபராதம்!

June 27, 2026
Next Post
ஆலையடிவேம்பில் அபிவிருத்தி என்ற போர்வையில் ஊழல் மோசடிகளை செய்தவர்களை தண்டிக்க வேணடும்; கலை ஆராச்சிகே கசுன் சம்பத்

ஆலையடிவேம்பில் அபிவிருத்தி என்ற போர்வையில் ஊழல் மோசடிகளை செய்தவர்களை தண்டிக்க வேணடும்; கலை ஆராச்சிகே கசுன் சம்பத்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு