மறைந்த முன்னாள் மட்டக்களப்பு – அம்பாறை மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் யோசப் பொன்னையா ஆண்டகையின் பூதவுடல் தன்னாமுனை தேவாலயத்திலிருந்து மரியாள் பேராலயத்திற்கு இன்று (20) கொண்டுவரப்பட்டது.
குறித்த பூதவுடல் இன்று மற்றும் நாளை பிற்பகல் 2:30 மணிவரை மரியாள் ஆலயத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

அதேவேளை நாளை12.30 தொடக்கம் 1.30 வரை புகழஞ்சலியும், 2:30 மணிக்கு திருப்பலி, அதனை தொடர்ந்து உடல் நல்லடக்கமானது மரியாள் பேராலயத்திற்குள் நடைபெறவுள்ளது.




