சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி புடின், பிரதமர் மோடி ஆகியோர் கலந்துகொண்டதோடு, சர்வதேச வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி போன்ற பல முக்கிய துறைகளில் ஒத்துழைப்பு குறித்து விவாதித்தனர்.
இதுதொடர்பில் தனது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இவ்வாறு தனது கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

“இருண்ட சீனாவிடம் ரஷ்யாவையும் இந்தியாவையும் இழந்துவிட்டோம் என்று தெரிகிறது.
மூன்று நாடுகளும் நீண்ட மற்றும் வளமான வாழ்க்கையை ஒன்றாக வாழ வாழ்த்துகிறேன்” என கிண்டலாக தெரிவித்துள்ளார்.
இந்திய பொருட்கள் மீது ட்ரம்ப் விதித்த வரி காரணமாக, அமெரிக்காவுடன் நெருக்கமாக இருந்த இந்தியா, தற்போது சீனா, ரஷ்யாவுடன் நட்பு பாராட்டி வருகிறது.








