செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் நேற்று (05) 44ஆவது நாளில் தொடர்ந்தபோது மேலும் ஐந்து எலும்புத் தொகுதிகள் வெளிக்கொணரப்பட்டன.
அவற்றில், கால்களை மடித்து, சம்மணம் கட்டியவாறு அமர்ந்த நிலையில் இருந்த ஒருவரின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனுடன், புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புத் தொகுதிகளின் எண்ணிக்கை 240 ஆக உயர்ந்துள்ளது. இதில் 235 எலும்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.








