அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் – சவற்காலை, அரூகாமைப் பிரதான வீதியில் நேற்று (14) இரவு வாகன விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பிலுவில் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவரின் சடலம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








