Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கைக்கு கடத்தவிருந்த கடல் அட்டைகளை கைப்பற்றிய தமிழக பொலிஸார்

இலங்கைக்கு கடத்தவிருந்த கடல் அட்டைகளை கைப்பற்றிய தமிழக பொலிஸார்

9 months ago
in செய்திகள்

இந்தியாவில், இராமநாதபுரத்திலிருந்து, இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்திருந்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் தமிழக பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் அருகே பதுக்கி வைத்திருந்த, தடை செய்யப்பட்ட 250 கிலோகிராம் எடையுடைய கடல் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய ரூபாவில், 10 இலட்சம் ரூபாய் மதிப்புள்ளவை என தெரிவிக்கப்படுகிறது.

பதப்படுத்தப்பட்ட குறித்த கடல் அட்டைகளை மீட்ட கியூ பிரிவு பொலிஸார், அதனை பதுக்கி வைத்த ஒருவரையும் கைது செய்து, விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இராமநாதபுரம் – சக்கரக்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கு பகுதியில், கடல் அட்டைகள் பதப்படுத்தி வருவதாக கியூ பிரிவு ஆய்வாளர் ஜானகிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று சனிக்கிழமை (04) இரவு குறித்த பகுதியில் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இதன்போது, நகராட்சி குப்பை கிடங்கு அருகே குடோன் அமைத்து அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை பதப்படுத்தி வந்தமை தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த சோதனை நடவடிக்கையின்போது, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பில், கடல் அட்டைகளை பதப்படுத்திய குழுவினரில் தேவி பட்டினத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், அங்கிருந்த மூவர் தப்பிச் சென்றுள்ளதாக தமிழக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை தேவிபட்டினத்தில் இருந்து வாங்கி வந்து, சக்கர கோட்டை குப்பை கிடங்கு அருகே உள்ள குடோனில் பதப்படுத்தி பின்கடல் வழியாக இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

குறித்த கடல் அட்டைகள் இராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஈரான் மீதான நடவடிக்கை இன்னும் முடியவில்லை; இஸ்ரேல் பிரதமர்!
உலக செய்திகள்

ஈரான் மீதான நடவடிக்கை இன்னும் முடியவில்லை; இஸ்ரேல் பிரதமர்!

June 23, 2026
புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது
செய்திகள்

புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

June 23, 2026
நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை மூட உத்தரவு!
செய்திகள்

நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை மூட உத்தரவு!

June 23, 2026
அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு!
செய்திகள்

அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு!

June 23, 2026
கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஓய்வுபெற்ற அதிபர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஓய்வுபெற்ற அதிபர் உயிரிழப்பு

June 23, 2026
வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!
செய்திகள்

வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!

June 23, 2026
Next Post
மாற்றுத்திறனாளியான 12 வயது சிறுவன் பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்து சாதனை

மாற்றுத்திறனாளியான 12 வயது சிறுவன் பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்து சாதனை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.