அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற முதல்வர்களின் ஒன்று கூடல் நேற்று (04) கொழும்பில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நடைபெற்ற நிர்வாகத் தேர்வில், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் திரு. சிவம் பாக்கியநாதன் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை முழுவதும் பல முதல்வர்கள் கலந்து கொண்ட நிலையிலும், தமிழ் பேசும் ஒருவருக்கு இத்தகைய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.








