அணு ஆயுதங்களை பயன்படுத்தி வரம்பில்லாத தூரம் செல்லும் நீர்மூழ்கி ட்ரோனை ரஷ்யா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது என ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரஷ்ய ஜனாதிபதி புட்டின் கூறியதாவது:
அணு ஆயுதங்களை பயன்படுத்தி வரம்பில்லாத தூரம் செல்லும் நீர்மூழ்கி ட்ரோன் ‘போஸிடான் சூப்பர் டார்பிடோ’ வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த ட்ரோன் ரஷ்யாவின் மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணையை விட தாக்கும் திறன் கொண்டது.
பெரிய நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்பட்ட போஸிடான் நீர்மூழ்கி ட்ரோனில், சாதாரண அணு உலையை போல் 100 மடங்கு சிறிய அணு சக்தி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சோதனை முயற்சி அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்தேய நாடுகளுடனான ரஷ்யாவின் பதற்றத்தை அதிகரிக்கும் என சர்வதேச அரசியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அணுசக்தி ஏவுகணையான புரெவெஸ்ட்னிக் சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதாக ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தெரிவித்து இருந்தார்.
இந்த சோதனை தேவையில்லாத ஒன்று என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்ப்பு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.








