Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சீனப் பொருட்கள் மீதான வரியை 10% குறைத்த ட்ரம்ப்

சீனப் பொருட்கள் மீதான வரியை 10% குறைத்த ட்ரம்ப்

8 months ago
in உலக செய்திகள், செய்திகள்

தென் கொரியாவில் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் உடனான சந்திப்பிற்குப் பிறகு, சீனப் பொருட்கள் மீதான வரியை 10% குறைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இரு நாட்டுத் தலைவர்களும் நீண்ட நேரம் வர்த்தகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் பல முக்கிய முடிவுகள் எடுத்துள்ளதாகக் கூறியுள்ளனர்.

இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்தபோது, ‘உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி’ என்று ஜின்பிங் கூறியுள்ளார். இந்த சந்திப்பு வெற்றிகரமானதாக அமைய வேண்டும் என்று ட்ரம்ப் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு சீன ஜனாதிபதி ஜின்பிங்குடனான சந்திப்பு மிகப்பெரிய வெற்றியாக அமைந்ததாக கூறிய ட்ரம்ப், சீனா மீதான வரியை 10% குறைப்பதாக அறிவித்துள்ளார்.

‘சீனாவுடன் மேலும் பேச்சுவார்தைகளுக்காக வருகிற ஏப்ரல் மாதம் சீனா செல்கிறேன். அதன் பின்னர் சீன ஜனாதிபதியும் அமெரிக்காவிற்கு வருகிறார்.

புளோரிடா, பாம் பீச், வொஷிங்டனில் இந்த சந்திப்பு நடக்கலாம். பல விடயங்களில் இன்று முடிவெடுத்திருக்கிறோம்.

சீனாவுக்கு கணினி சிப்ஸ்களை ஏற்றுமதி செய்வது குறித்தும் விவாதித்தோம். அனைத்து விடயங்களையும் பேசி முடித்துவிட்டோம் என்று கூற முடியாது.

ஆனால் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகலாம். இனி பெரிய தடைகள் எதுவும் இல்லை. ஜின்பிங், நாட்டின் சக்திவாய்ந்த தலைவர்’ என்றும் ட்ரம்ப் கூறினார்.

ஸி ஜின்பிங் கூறுகையில்,

“சீனா மீதான வரி, 57 சதவீதத்திலிருந்து 47 சதவீதமாகக் குறைக்கப்படுவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். சீனா உடனடியாக அமெரிக்காவிலிருந்து சோயாபீன்ஸ் வாங்கத் தொடங்கும்.

மிகப்பெரிய பிரச்சினையாக இருந்த, அரிய வகை மண் ஏற்றுமதி பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டது. இனி சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு மண் ஏற்றுமதியில் எந்தத் தடைகளும் இருக்காது”

“அமெரிக்காவும் சீனாவும் அடிக்கடி நேரில் சந்தித்துக்கொள்ளவில்லை என்றாலும் அவர்கள் கூட்டாளிகளாகவும் நண்பர்களாகவும் இருக்க வேண்டும்.

உலக பொருளாதாரத்தை மேம்படுத்த சீனாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட வேண்டும். இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டால் சில விடயங்களை சாதிக்க முடியும்.

சில வேறுபாடுகள் இருப்பது சாதாரணம்தான். இரு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையே அவ்வப்போது உராய்வுகள் ஏற்படுவது இயல்பானது” என்று தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankapolice

தொடர்புடையசெய்திகள்

“செம்மணி தமிழ் இனப்படுகொலைக்கான சாட்சி”; சிறிநாத்
காணொளிகள்

“செம்மணி தமிழ் இனப்படுகொலைக்கான சாட்சி”; சிறிநாத்

June 24, 2026
சுரேஷ் சலே விவகாரம்; பாப்பரசருக்கு கடிதம் அனுப்பிய தாயார்!
செய்திகள்

சுரேஷ் சலே விவகாரம்; பாப்பரசருக்கு கடிதம் அனுப்பிய தாயார்!

June 24, 2026
ராஜபக்ச குடும்பத்தினர் திட்டமிட்டு பழிவாங்கப்படுகின்றனர்; மகிந்த ராஜபக்ச குற்றச்சாட்டு!
செய்திகள்

ராஜபக்ச குடும்பத்தினர் திட்டமிட்டு பழிவாங்கப்படுகின்றனர்; மகிந்த ராஜபக்ச குற்றச்சாட்டு!

June 24, 2026
தூக்கி அடிக்குறதா?..தூக்காம அடிக்குறதா?;கிளிநொச்சியே மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டம்-அர்ச்சுனா
அரசியல்

தூக்கி அடிக்குறதா?..தூக்காம அடிக்குறதா?;கிளிநொச்சியே மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டம்-அர்ச்சுனா

June 24, 2026
352 மில்லியன் ரூபா பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருளுடன் கனேடிய யுவதி கைது!
செய்திகள்

352 மில்லியன் ரூபா பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருளுடன் கனேடிய யுவதி கைது!

June 24, 2026
6 உலகக் கிண்ண தொடர்களில் கோல் அடித்து ரொனால்டோ வரலாற்று சாதனை!
செய்திகள்

6 உலகக் கிண்ண தொடர்களில் கோல் அடித்து ரொனால்டோ வரலாற்று சாதனை!

June 24, 2026
Next Post
1 ட்ரில்லியன் டொலர் ஊதியம் வழங்கவில்லை எனின் டெஸ்லாவில் இருந்து எலான் மஸ்க் வெளியேறுவார்?

1 ட்ரில்லியன் டொலர் ஊதியம் வழங்கவில்லை எனின் டெஸ்லாவில் இருந்து எலான் மஸ்க் வெளியேறுவார்?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.