இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளை சேர்ந்து 35 மீனவர்களை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
அவர்களிடமிருந்து 3 விசைப்படகுகள், ஒரு நாட்டுப்படகு ஆகியவற்றையும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
நாட்டுப்படகில் இருந்த 4 மீனவர்கள், 3 விசைப்படகுகளில் இருந்த 31 பேர் என மொத்தம் 35 மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச்செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.








