Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

8 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று இன்று அதிகாலை (03) ஏற்ப்பட்டுள்ளது.இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். ஆப்கானிஸ்தானின் மசார்-இ-ஷெரிஃப் நகருக்கு அருகே இந்த நில நடுக்கம் 28 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகி உள்ளது. இதன் விளைவாக இந்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கட்டிடங்கள் நிலைகுலைந்து போயுள்ளன. இதுவரை 4 பேர் பலியாகியுள்ளதாகவும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு,நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஆப்கானிய அரசின் அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறுகின்றன.

நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ள மசார்-இ-ஷெரிஃப் நகரில் மட்டும் 5.23 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ள சேதங்கள், உயிரிழப்புகள் ஆகியவைப் பற்றிய முழுமையான விவரங்களை அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை முகமை இன்னும் வெளியிடவில்லை.

தற்போது கிடைத்த தகவலின் படி, 20 பேர் உயிரிழந்துள்ளனர். 320 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் வகையில் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தால் மஸர்-இ ஷரிப்பில் உள்ள புகழ்பெற்ற புனிதத் தலமான ப்ளூ மசூதியின் ஒருபகுதி சேதமடைந்துள்ளது.

பெரிய புவித்தட்டுகள் சந்திக்கும் பகுதியில் ஆப்கானிஸ்தான் அமைந்துள்ளது எனவே, அடிக்கடி நிலநடுக்கங்களால் இந்த நாடு பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத நிலநடுக்கத்தால் ஆப்கானிஸ்தானில் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

An earthquake of magnitude 6.3 hits northern Afghanistan. pic.twitter.com/lb5LWc0rHk

— ANI (@ANI) November 3, 2025
Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

6 உலகக் கிண்ண தொடர்களில் கோல் அடித்து ரொனால்டோ வரலாற்று சாதனை!
செய்திகள்

6 உலகக் கிண்ண தொடர்களில் கோல் அடித்து ரொனால்டோ வரலாற்று சாதனை!

June 24, 2026
உயர்தர பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
செய்திகள்

உயர்தர பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

June 24, 2026
தெல்தெனிய கொலைச் சம்பவம்; சந்தேக நபர்கள் யாழில் கைது!
செய்திகள்

தெல்தெனிய கொலைச் சம்பவம்; சந்தேக நபர்கள் யாழில் கைது!

June 24, 2026
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
செய்திகள்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

June 24, 2026
ஈரான் மீதான நடவடிக்கை இன்னும் முடியவில்லை; இஸ்ரேல் பிரதமர்!
உலக செய்திகள்

ஈரான் மீதான நடவடிக்கை இன்னும் முடியவில்லை; இஸ்ரேல் பிரதமர்!

June 23, 2026
புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது
செய்திகள்

புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

June 23, 2026
Next Post
இலங்கையில் கைது செய்யப்பட்ட 35 மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; விஜய் வலியுறுத்தல்

இலங்கையில் கைது செய்யப்பட்ட 35 மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; விஜய் வலியுறுத்தல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.