கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருங்காலி காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்களை கைது செய்ய பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் நேற்று (02) முயற்சி மேற்கொண்டனர்.
அச்சமயம், குறித்த இடத்தில் இருந்த சிலர் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தி தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.
இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஏழு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தாக்குதலினால் காயமடைந்த விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இருவர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சாகர குலசேகர மற்றும் பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இராமநாதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.















