கிழக்கிலங்கையின் திருப்பதி எனப் போற்றப்படும் வந்தாறுமூலை ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீமன் மகா விஷ்ணு தேவஸ்தானத்தின் நிர்வாக சபைக்கு உட்பட்ட ஆலயங்களுக்கான புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
பாரம்பரிய முறையின்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை (09) ஆலய முன்றலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், குமாரசாமி சிறியார் தலைவராக, காத்தமுத்து யோகநாதன் செயலாளராக, ஈஸ்வரமூர்த்தி கலைச்செல்வன் பொருளாளராக, காத்தமுத்து யோகராசா உபதலைவராக மற்றும் நல்லரெட்ணம் லம்போசன் உபசெயலாளராக தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய நிர்வாகத்தினர் தங்கள் பதவிக்கு வழங்கிய வாய்ப்பிற்கும், பொதுமக்களின் ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவித்தனர். செயலாளர் காத்தமுத்து யோகநாதனின் நன்றியுடன் பொதுக் கூட்டம் நிறைவடைந்தது.


















