மாவீரர் தின அஞ்சலிக்காக இன்றைய தினம் (23) தாண்டியடி துயிலும் இல்ல சிரமதான மற்றும் ஏற்பாட்டு பணிகள்நடைபெற்றுவந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த சுரேஷ் தலைமையிலான சைக்கிள் கட்சி குழுவினர் குறித்த இடத்தில் குழப்பம் ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்ட்டுள்ளது.
தமிழ் ஈழ உணர்வாளர்கள் மற்றும் வவுணதீவு பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் என பலரின் உதவியுடன் இன்றையதினம் (23) காலையிலிருந்து தாண்டியடி துயிலும் இல்லம் அஞ்சலிக்காக ஏற்ப்பாடு செய்யப்பட்டுவந்தது.

இந்தநிலையில் சற்று முன்னர் குறித்த இடத்திற்கு வந்த சுரேஷ் தலைமையிலான சைக்கிள் கட்சி குழுவினர் குறித்த அஞ்சலி நடத்துவதற்கு தமக்கே உரித்து உண்டு என பேசியதாகவும், அஞ்சலி தாம் தான் நடத்த வேண்டும் என்று கூறியதாகவும் தெரிவித்து குழப்பம் விளைவித்தாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
பொதுமக்கள் ஒன்றாக சேர்ந்து அர்ப்பணிப்புடன் செய்யவேண்டிய அஞ்சலியை சில அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் அரசியலுக்காக மட்டும் முன்னெடுப்பதாக ஆரம்ப ஏற்பாட்டுக்குழுவினர் மேலும் தெரிவிக்கின்றனர்.








