இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (இ.தொ.கா) பொதுச்செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான ஜீவன் தொண்டமான் , கட்சியிலிருந்து விரைவில் இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் சிலரின் செயற்பாடுகள் தொடர்பில் கடும் அதிருப்தி அடைந்துள்ளதன் காரணமாக, மிக விரைவில் இ.தொ.காவிலிருந்து விலகும் முடிவை அவர் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசியல் காரணங்களுக்காக இந்த முடிவை அவர் எடுத்ததாக சொல்லப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பில் ஜீவன் தொண்டமான் எம்.பியிடம் ஊடகங்கள் தொலைபேசியில் கருத்து கேட்டபோதும், இதுவிடயம் குறித்து அவர் பதிலளிக்க மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.








