Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பருத்தித்துறையில் பொலித்தீன் தடை தீவிரம் – உணவகங்களுக்கு இறுதி அவகாசம் 2026 ஜனவரி 1 வரை

பருத்தித்துறையில் பொலித்தீன் தடை தீவிரம் – உணவகங்களுக்கு இறுதி அவகாசம் 2026 ஜனவரி 1 வரை

6 months ago
in செய்திகள்

உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிலையங்களில் வரும் 01.01.2026 முதல் பொலித்தீன் பாவனை முற்றாக தடைசெய்யப்படும் எனவும் அதனை மீறும் உணவகங்கள் உள்ளிட்ட வியாபார நிலையங்களின் வியாபார உரிமம் இடைநிறுத்தப்படும் என பருத்தித்துறை நகரசபை அறிவித்துள்ளது.

உணவகங்கள் மற்றும் உணவுப் பொருட்களை கையாளும் நிலையங்களின் உரிமையாளர்களுடன் இன்று (22) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பருத்தித்துறை நகரசபை பொதுச்சுகாதார பரிசோதகர் ப.தினேஷ் இதனை தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் பருத்தித்துறை நகரசபை மாநாட்டு மண்டபத்தில் இன்று (22) திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு இடம்பெற்ற கலந்துரையாடலில் நகரசபை பொதுச்சுகாதார பரிசோதகர் ப.தினேஷ், நகரசபை நிர்வாக உத்தியோகத்தர் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது நகரசபை பொதுச்சுகாதார பரிசோகரினால் லஞ்ச் சீற் பாவனை தடை குறித்தும் உணவகங்கள், உணவு கையாளும் நிலையங்களில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பிலும் விளக்கி கூறப்பட்டிருந்தது.

2026 ஆம் ஆண்டு முதல் உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிலையங்களில் உள்ளக பயன்பாடு மற்றும் உணவு பொதியிடல் உள்ளிட்ட எந்த செயற்பாடுகளின் போதும் லஞ்ச் சீற் பயன்படுத்த முடியாது எனவும் அவ்வாறு செயற்படுபவர்கள் மீது நீதிமன்றத்தின் ஊடாக நேரடியாக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதுடன், அதனை மீறி செயற்படும் வியாபார நிலையங்களின் வியாபார உரிமத்தை நகரபிதாவுக்கு உள்ள அதிகாரத்தின் கீழ் இடைநிறுத்தப்படும் என தெரிவித்தார்.

லஞ்ச் சீற் பாவனைக்கு மாற்றீடாக உள்ளக பயன்பாட்டில் வாழை இலை, தாமரை இலை, தேக்கம் இலை போன்றவற்றையும் உணவு பொதியிடலின் போது ஈய பேப்பர் மற்றும் உணவு பொதியிடலுக்காக அனுமதிக்கப்பட்ட கொள்கலன்களை பயன்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டது.

அத்துடன் பருத்தித்துறை நகர சபை எல்லைக்குட்பட்ட உணவகங்களின் பயன்பாட்டிற்கு கொள்வனவு செய்யப்படும் இறைச்சி வகைகளை நகரசபைக்கு உட்பட்ட இறைச்சி கடைகளில் இருந்தே பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதன்போது கலால் செய்யப்பட்ட இறைச்சிகளை நகரசபைக்கு வெளியே இருந்துதான் பெற்றுக்கொள்ள கூடியதாக இருப்பதாக முஸ்லிம் உணவக தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்ட போது, அவ்வாறான சந்தர்ப்பங்களில் அந்தந்த உள்ளுராட்சி மன்றங்களினால் அங்கீகரிக்கப்பட்ட இறைச்சி விற்பனை நிலையங்கள் அல்லது இறைச்சி கூடங்களில் இருந்து கொள்வனவு செய்ய வேண்டும் எனவும் அதற்கான பற்றுச்சீட்டை அவசியம் வைத்திருக்க வேண்டும் எவும் நகரசபை பொதுச்சுகாதார பரிசோதகரினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, கடந்த ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் பருத்தித்துறை நகரசபைக்குட்ட உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிலையங்களில் உள்ளக பயன்பாட்டில் லஞ்ச் சீற் பாவனை தடை செய்யப்பட்டுள்ளதுடன் 01.01.2026 முதல் முற்றுமுழுதான லஞ்ச் சீற் பாவனையை தடைசெய்யும் வகையில் மூன்று மாத கால அவகாசம் பருத்தித்துறை நகர சபையினால் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த கலந்துரையாடலின் போது பருத்தித்துறை நகரசபைக்குட்பட்ட உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிலையங்களின் உரிமையாளர்கள், பருத்தித்துறை வர்த்தகர் சங்க நிர்வாகத்தினர் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாவலடி ஸ்ரீ மாரி கடல்நாச்சி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்!
செய்திகள்

நாவலடி ஸ்ரீ மாரி கடல்நாச்சி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்!

June 23, 2026
வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் ஆலய தீர்த்த உற்சவம்!
செய்திகள்

வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் ஆலய தீர்த்த உற்சவம்!

June 23, 2026
சொறிக்கல்முனை அந்தோனியார் ஆலய திருவிழா
காணொளிகள்

சொறிக்கல்முனை அந்தோனியார் ஆலய திருவிழா

June 23, 2026
ஞானசார தேரருக்கு விதித்த 09 மாத சிறைத்தண்டனை உறுதிசெய்யப்பட்டது
செய்திகள்

ஞானசார தேரருக்கு விதித்த 09 மாத சிறைத்தண்டனை உறுதிசெய்யப்பட்டது

June 23, 2026
கிராமிய வங்கி பெட்டகத்தை உடைத்து தங்கநகை திருட்டு
செய்திகள்

கிராமிய வங்கி பெட்டகத்தை உடைத்து தங்கநகை திருட்டு

June 23, 2026
2027 முதல் நாடு முழுவதும் ஒருங்கிணைந்த முன்பள்ளிக் கல்வி முறை அறிமுகம்!
செய்திகள்

2027 முதல் நாடு முழுவதும் ஒருங்கிணைந்த முன்பள்ளிக் கல்வி முறை அறிமுகம்!

June 23, 2026
Next Post
கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட மருதமுனை ஜாயா வீதியை அபிவிருத்தி செய்து தர கோரல்

கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட மருதமுனை ஜாயா வீதியை அபிவிருத்தி செய்து தர கோரல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.