Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஒரே ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த அதிகமான சுற்றுலாப் பயணிகள் சாதனை முறியடிக்கப்பட்டது

ஒரே ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த அதிகமான சுற்றுலாப் பயணிகள் சாதனை முறியடிக்கப்பட்டது

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஓர் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் சாதனை இன்று (29) முறியடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் வரலாற்றில் அதிகூடிய சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த ஆண்டான 2018 இல் பதிவாகியிருந்த 2,333,796 சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை இன்றைய தினம் கடந்துள்ளதையடுத்து இந்தச் சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய, 2025 ஆம் ஆண்டின் 2,333,797 ஆவது சுற்றுலாப் பயணி இன்று காலை வரவேற்கப்பட்டதாக இலங்கை சுற்றுலாச் சபை தெரிவித்துள்ளது.

இந்த வெற்றியானது நாட்டின் சுற்றுலாப் பயணத்தில் ஒரு தீர்மானமிக்க மைல்கல்லாக அமைவதுடன், உலகின் முன்னணி சுற்றுலாத் தலமாக இலங்கை மீதான நம்பிக்கையையும் அதன் மீண்டெழும் சக்தியையும் வெளிப்படுத்துகின்றது.

சுற்றுலாத்துறை இலங்கை பொருளாதாரத்தின் பிரதான தூணாகத் தொடர்ந்து நீடிப்பதுடன், வெளிநாட்டு செலாவணி வருவாய், வேலைவாய்ப்பு மற்றும் கலாசாரப் பரிமாற்றங்களுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது.

‘டித்வா’ புயல் அனர்த்தம் போன்ற சவால்களுக்கு மத்தியிலும் இந்த இலக்கை எட்டியமையானது இத்துறை மற்றும் அதன் பங்குதாரர்களின் பலத்தையும் ஒற்றுமையையும் பிரதிபலிக்கிறது என இலங்கை சுற்றுலாச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewspoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டு நகரில் உணவகம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் திருடிவர் கைது
செய்திகள்

மட்டு நகரில் உணவகம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் திருடிவர் கைது

June 21, 2026
செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 400 தாண்டியது
செய்திகள்

செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 400 தாண்டியது

June 21, 2026
லண்டன் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி போராட்டம்
உலக செய்திகள்

லண்டன் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி போராட்டம்

June 21, 2026
டீசல் விலை குறிக்கப்பட்டாலும் 6 மாதத்திற்கு பஸ் கட்டணத்தை குறைக்கமுடியாது; தனியார் பஸ் சங்க தலைவர்
செய்திகள்

டீசல் விலை குறிக்கப்பட்டாலும் 6 மாதத்திற்கு பஸ் கட்டணத்தை குறைக்கமுடியாது; தனியார் பஸ் சங்க தலைவர்

June 21, 2026
இலங்கையில் வீட்டு பணியாளர்களுக்கான வெற்றிடம் அதிகரிப்பு; வெளிநாடு செல்வதே காரணமாமென தகவல்
செய்திகள்

இலங்கையில் வீட்டு பணியாளர்களுக்கான வெற்றிடம் அதிகரிப்பு; வெளிநாடு செல்வதே காரணமாமென தகவல்

June 21, 2026
தகுதியுடைய விவசாயிகளுக்கு சிறுபோகத்திற்கான உர மானியம் வழங்கப்பட்டுள்ளது; விவசாய அபிவிருத்தி திணைக்களம்
செய்திகள்

தகுதியுடைய விவசாயிகளுக்கு சிறுபோகத்திற்கான உர மானியம் வழங்கப்பட்டுள்ளது; விவசாய அபிவிருத்தி திணைக்களம்

June 21, 2026
Next Post
சிறைக்குள் டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யவேண்டுமென கோரிக்கை

சிறைக்குள் டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யவேண்டுமென கோரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு