Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் கடந்த 12 மணித்தியாலயத்தில் ஒரு யுவதி உட்பட 3 பேர் தற்கொலை!

மட்டக்களப்பில் கடந்த 12 மணித்தியாலயத்தில் ஒரு யுவதி உட்பட 3 பேர் தற்கொலை!

6 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 12 மணித்தியாலயத்தில் ஒரு யுவதி உட்பட 3 பேர் தற்கொலை செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

அந்த அடைப்படையில் இன்று காலை (02) அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு 7ம் பிரிவு சமுர்த்தி வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகுந்தன் சந்தோஷ் என்பவர் அரசடியில் வர்த்த நிலையங்களுக்கு முன்னால் நாட்டப்பட்ட விளம்பர பலகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்

குறித்த இளைஞன் கொழும்பில் தொழில் செய்துவரும் நிலையில் சம்பவ தினமான நேற்று வியாழக்கிழமை கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு? அதே பிரதேசத்தைச் சேர்ந்த இரு இளைஞர்களுடன் பிரயாணித்து பின்னர் நேற்று நள்ளிரவு மட்டக்களப்பில் வைத்து குறித்த இளைஞன் இறங்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட வர்த்தக நிலையத்தில் சென்று அங்கு கடமையாற்றும் ஒருவரின் கையடக்க தொலைபேசியை வாங்கி தாய்க்கு தொடர்பு கொண்டுள்ளார். அதன் பின்னர் வர்த்தக நிலையம் இரவு 12.00 மணிக்கு மூடப்பட்டது.

இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (02) அதிகாலையில் 6.00 மணிக்கு குறித்த வர்த்தக நிலைய கட்டிட தொகுதியில் இருந்த விளம்பரபலகை கம்பியில் இளைஞன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

குறித்த நபர் அக்கரைப்பற்று நீதிமன்ற கட்டிடத்திற்கு தீயிட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளார் என பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதேவேளை ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள செங்கலடி வைத்தியசாலை உள்வீதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று வியாழக்கிழமை (01-01-2026) இரவு -700 மணியளவில் 22 வயதுடைய யுவதி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் அதே பொலிஸ் பிரிவிலுள்ள மயிலம்பாவெளி பிரதேசத்தில் ஒரு பிள்ளையின் தந்தையான 22 வயதுடையவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார்.

குறித்த நபர் கடந்த 3 மாதங்களாக ஒரு தொழிலும் இல்லாது வந்த நிலையில் மது அருந்துவதற்கு மனைவியிடம் ஆயிரம் ரூபா பணம் கோரியதாகவும் அவரிடம் குழந்தைக்கு பால் வாங்க 200 ரூபா மட்டும் இருந்துள்ளதாகவும் இந்த நிலையில் சம்பவ தினமான நேற்று குறித்த நபர் 3 முறை கிணற்றில் வீழ்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த நிலையில் காப்பாற்றப்பட்டு உள்ளதாகவும் அதன் பின்னர் மனைவி குழந்தையுடன் உறவினர் வீட்டுக்கு சென்ற நிலையில் தாயாருக்கு தற்கொலை செய்யப்போவதாக தெரிவித்து விட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை நேற்று வியாழக்கிழமை முதலாம் திகதி இரவு 7 மணியில் இருந்து இன்று அதிகாலை 6.00 மணி வரை மாவட்டத்தில் 3 பேர் தற்கொலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது
செய்திகள்

ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது

June 20, 2026
O/L பரீட்சையில் 100% சித்தி பெற்று அடாவத்தை திருமகள் தமிழ் வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை
செய்திகள்

O/L பரீட்சையில் 100% சித்தி பெற்று அடாவத்தை திருமகள் தமிழ் வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை

June 20, 2026
காணாமற்போனவர்கள் விவகாரம்; 7,000க்கும் மேற்பட்டோரின் அடிப்படை தகவல்கள் சேகரிப்பு
செய்திகள்

காணாமற்போனவர்கள் விவகாரம்; 7,000க்கும் மேற்பட்டோரின் அடிப்படை தகவல்கள் சேகரிப்பு

June 20, 2026
பதுளை – நானுஓயா இடையிலான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்
செய்திகள்

பதுளை – நானுஓயா இடையிலான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

June 20, 2026
மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு வீடியோ இணையத்தில் வெளியீடு; அதிபர், பிரதி அதிபர் மற்றும் மாணவர் ஒருவர் கைது!
செய்திகள்

மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு வீடியோ இணையத்தில் வெளியீடு; அதிபர், பிரதி அதிபர் மற்றும் மாணவர் ஒருவர் கைது!

June 20, 2026
சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் அமைத்து கடும் தண்டனை வழங்க வேண்டும்; அந்தனிசில் ராஜ்குமார்!
காணொளிகள்

சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் அமைத்து கடும் தண்டனை வழங்க வேண்டும்; அந்தனிசில் ராஜ்குமார்!

June 20, 2026
Next Post
உழவு இயந்திரத்துடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து; இளைஞன் உயிரிழப்பு

உழவு இயந்திரத்துடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து; இளைஞன் உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு