உலக நாடுகளுக்குப் பாடம் சொல்லும் தகுதியை அமெரிக்கா இழந்துவிட்டது. வெனிசுலா அதிபரை நாடு கடத்தியிருப்பது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல், டிரம்ப் நெருப்போடு விளையாடுகிறார். இந்த சம்பவம் அனு ஆயுதங்கள் இல்லாத நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கை, நட்பு நாடுகளுக்கு பாதிப்பு என்றால் நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம் என வட கொரிய அதிபர் கிம் ஜோங் ஹுன் தெரிவித்துள்ளார்.
“மூன்றாம் உலகப்போர் தொடங்க அமெரிக்கா விரும்பினால், அதை எதிர்கொள்ள நாங்களும் தயாராக உள்ளோம். எங்களது ஏவுகணைகள் சரியான இலக்கை நோக்கி குறி வைத்து தயாராக உள்ளது. வெனிசுலா அதிபர் கைது தனி மனிதனின் கைது அல்ல, உலக நாடுகளின் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என தெரிவித்துள்ள கிம் ஜாங் உன், இதற்கான விலையை அமெரிக்கா மிகக் கடுமையாகக் கொடுக்க வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார்.”
அத்தோடு வெனிசுலா மக்களால் சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரையும், அவரது மனைவியை அமெரிக்கா விடுவிக்க வேண்டும். இல்லையெனில் 3-ம் உலகப் போரை தொடங்க அமரிக்கா தயார் என்றால் டிரம்ப் முன்னாள் அதிபராக மாற்றப்படுவார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.








