இத்தாலியில் விசா இல்லாத நிலையில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞன் நாடு கடத்தப்பட்டுள்ளார்.
அந்நாட்டு குடிவரவு அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் குறித்த இளைஞன் சிக்கியிருந்தார்.
இத்தாலியின் பிரேஷியா ரயில் நிலையத்தில் வைத்து குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட இளைஞன் புத்தளம் பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

கடந்த மாதம் 8ஆம் திகதி குறித்த இளைஞன் ரயில் நிலையத்தில் நின்ற போது அவரது ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், அவர் அங்கு வாழ்வதற்கான விசாவினை காண்பிக்க தவறிய நிலையில் கைத செய்யப்பட்டார்.
Sponser visaவில் இத்தாலி சென்றுள்ள நிலையில் குறித்த இலங்கை இளைஞனை அழைத்தவர்கள் அவருக்கான உரிய ஆவணங்களை தயாரிக்க தவறியுள்ளமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.








