அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் இல்லத்துக்குள் அத்துமீறி துப்பாக்கியுடன் நுழைந்த இளைஞர் மீது சட்ட அமுலாக்க அதிகாரிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள ட்ரம்ப்பின் மார்-அ-லாகோ இல்லத்துக்குள், நேற்று நள்ளிரவு துப்பாக்கி, எரிவாயு கேனுடன் இளைஞனொருவா் அத்துமீறி நுழைந்துள்ளார்.
அவரைக் கண்ட சட்ட அமுலாக்க அதிகாரிகள், துப்பாக்கியையும் எரிவாயு கேனையும் கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு தெரிவித்துள்ளனர். எனினும் எரிவாயு கேனை கீழே போட்ட அவர், அதிகாரிகளை சுடும் விதமாக துப்பாக்கியை உயா்த்தியதாகக் கூறப்படுகின்றது.

இதைத்தொடர்ந்து தங்களை தற்காத்துக்கொள்ளும் நோக்கில், அந்த இளைஞர் மீது அதிகாரிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
அந்த நபர் வடக்கு கரோலினாவைச் சேர்ந்த ஆஸ்டின் டக்கர் மார்டின் (21) என்று தெரியவந்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் எதற்காக அவர் ட்ரம்ப்பின் இல்லத்துக்குள் நுழைந்தார் என்ற தகவல் வெளியாகவில்லை.








